சிவாவால் இரண்டாக பிரிந்த வேலைக்காரன் ? - வைரலாகும் தகவல்.!

Bookmark and Share

சிவாவால் இரண்டாக பிரிந்த வேலைக்காரன் ? - வைரலாகும் தகவல்.!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்னேகா, பிரகாஷ் ராஜ் என பல பிரபலங்கள் இணைத்து நடித்துள்ள வேலைக்காரன் படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

ஆனால் தற்போது படத்தை எப்படி வெளியிடுவது என தெரியாமல் படக்குழுவினர் தவித்து வருகிறார்களாம், இவர்களின் தவிப்புக்கு காரணம் என்னவென்றால் படத்தின் புட்டேஜ் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளது தானாம்.

இதனால் சிவகார்த்திகேயன் படத்தை இரண்டு பாகங்களாக பிரித்து பாகுபலி போல் ரிலீஸ் செய்யலாம் என ஐடியா கொடுத்துள்ளாராம். இதனால் படம் பொங்கலுக்கு முதல் பகுதியும் தமிழ் புத்தாண்டுக்கு இரண்டாம் பகுதியும் வெளியாகும் என கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions