இப்படியொரு வேகத்தில் வேலைக்காரன் படக்குழு

Bookmark and Share

இப்படியொரு வேகத்தில் வேலைக்காரன் படக்குழு

தற்போதைய காலகட்டத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு பிறகு அதிக ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய படம் என்றால் அது சிவகார்த்திகேயன் படம் தான்.தமிழ் சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திற்குள் விறுவிறுவென வளர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

தற்போது ஒரு முன்னணி நடிகருக்கான அந்தஸ்தை பிடித்து தயாரிப்பாளர்களுக்கு பிடித்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.தற்போது அவருடைய நடிப்பில் ‘வேலைக்காரன்’ படம் உருவாகிவருகிறது.

மோகன் ராஜா இயக்கிவரும் இப்படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டி, ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 16 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களுக்கு இசை அமைத்த டி.இமானே இந்த படத்திற்கும் இசை அமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படத்தையும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions