சிவகார்த்திகேயனை மறைமுகமாக தாக்கினாரா விஜய் சேதுபதி? என்னப்பா நடக்குது?

Bookmark and Share

சிவகார்த்திகேயனை மறைமுகமாக தாக்கினாரா விஜய் சேதுபதி? என்னப்பா நடக்குது?

சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் நட்பு என்பதையும் தாண்டி அண்ணன் தம்பி போல பழகி வருகிறார்கள். “என் சிவாவை நான் பாராட்டாமல் வேறு யாரு பாராட்டப்போகிறார்கள்?” றெக்கயில் சிவகார்த்திகேயன் ரெஃபரன்ஸ் வந்ததற்குவிஜய் சேதுபதி கூறிய பதில் இது.

அப்படி இருக்கும்போது சிவாவுக்கும் விஜய் சேதுபதிக்கும் பிரச்சனை என அவ்வப்போது தகவல் வெளியாகும். அந்தவகையில் அண்மையில் விஜய் சேதுபதி கூறிய ஒரு ஸ்டேட்மெண்ட்டை சிவகார்த்திகேயனுக்கு எதிராக டிவிஸ்ட் செய்து இருவருக்குள்ளும் மீண்டும் பகைமையை மூட்ட நினைக்கிறார்கள் ஒருசிலர்.

அதாவது, ” என்னுடைய வளர்ச்சிக்கு அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அதிர்ஷ்டம் யாரையும் முன்னேற வைக்காது. உழைப்பு மட்டும்தான் உயர்த்தும்” என்று விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறாராம். இதை அவர் சிவாவை பார்த்துதான் சொல்லியிருக்கிறார் என ஒருசிலர் முணுமுணுக்கிறார்கள்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions