சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் விஜய், விக்ரம் பட தயாரிப்பாளர்

Bookmark and Share

சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் விஜய், விக்ரம் பட தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ரெமோ’. பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

வருகிற அக்டோபர் 7-ந் தேதி ‘ரெமோ’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ள நிலையில், தற்போது இப்படத்தை வியாபாரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு ஏரியா வெளியீட்டு உரிமையை ஏ.ஜி.எஸ். நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல், கோயம்புத்தூர், மதுரை, வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய ஊர்களின் வெளியீட்டு உரிமையும் விற்றுவிட்டது.

இந்நிலையில், கேரளாவில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ‘புலி’, ‘இருமுகன்’ ஆகிய படங்களை தயாரித்த சிபு தமீன்ஸ் பெற்றுள்ளார். சிபு தமீன்ஸ் தயாரித்திருக்கும் ‘இருமுகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ‘ரெமோ’ படத்தின் வெளியீட்டு உரிமைகள் எல்லாம் மினிமம் கியாரண்டி அடிப்படையிலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

‘ரெமோ’ படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் கைகோர்த்துள்ளனர். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions