சிவகார்த்திகேயனின் சூரி செண்டிமென்ட்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் சூரி செண்டிமென்ட்!

சிம்பு, ஆர்யா, ஜீவா, உதயநிதி உள்ளிட்ட சில ஹீரோக்களுக்கு எப்படி சந்தானம் செண்டிமென்ட் காமெடியனோ அதேபோன்று ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன், விஷால், விமல், விதார்த் போன்ற பல நடிகர்களுக்கு சூரி செண்டிமென்ட் காமெடியனாக இருக்கிறார்.

இவர்களில் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணிக்கு நல்லதொரு வரவேற்பு உள்ளது. அவர்கள் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் அவர்களது காமெடி பெரிய அளவில் பேசப்பட்டதோடு, படங்களும் வெற்றி பெற்றது.

அந்த வெற்றிதான் இப்போது ரஜினி முருகன் படத்திலும் அவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது.அதோடு, அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே, காக்கி சட்டை படங்களில் காமெடி காட்சிகள் பெரிதாக பேசப்படவில்லை.

அதேசமயம், தற்போது அவர்கள் இணைந்து நடித்துள்ள ரஜினிமுருகன் படத்தில் அவர்களின் காமெடி அட்டகாசம் ரொம்ப ஜாஸ்தியாகவே உள்ளதாம். அதனால் படம் கண்டிப்பாக ஹிட்டாகி விடும் என்கிற நம்பிக்கை இப்போதே சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால், தனது புதிய படத்திலும் சூரி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாராம் சிவகார்த்திகேயன். ஆனால், தற்போது கோடம்பாக்கத்தின் நம்பர்-ஒன் காமெடியனாகி விட்ட சூரி, அஜீத், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்கள் உள்பட பத்து படங்களுக்கு மேல் நடிப்பதால், அடுத்து அவரது கால்சீட்டுக்காக, சிவகார்த்திகேயன் உள்பட அனைத்து முன்னணி ஹீரோக்களுமே காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions