சிவகுமார் செய்யும் ஆராய்ச்சி!

Bookmark and Share

 சிவகுமார் செய்யும் ஆராய்ச்சி!

மகன்கள் சூர்யா, கார்த்தி என்று இரு நட்சத்திர நடிகர்கள் உருவான பிறகு சிவகுமார் படம், டிவி தொடர்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் நடிப்பதை விட்டு விட்டார்.

சிவகுமார் கல்வி அறக்கட்டளை, அகரம் பவுண்டேஷன் பணிகளில் ஆலோசனை கூறுவது கண்காணிப்பது, விழாக்கள் செல்வது சிறப்புரையாற்றுவது என்று தனது பொழுதைப் பயனுள்ளதாக்கி வருகிறார். ஆன்மிகத்தில் நாட்டமுள்ள சிவகுமார் கம்பராமாயணத்தில் ஆராய்ச்சி செய்து நூறு பாடல்களை மனப்பாடம் செய்து முழு ராமாயணத்தை மூன்று மணிநேரம் பேசி கல்லூரிகளில் அசத்தினார்.

அதேபோல இப்போது மகாபாரத்தை ஆய்வு செய்து வருகிறார். ஆய்வு முடிவு ஒன்றும் அற்புதமான உரையும் காத்திருக்கின்றன.. இப்படித் தனக்கிருக்கும் அபரிமிதமான நினைவாற்றலை பயனுள்ள முறையில் பயன்படுத்தி வருகிறார்.

பாராட்டுகளையும் அள்ளுகிறார். முன்தயாரிப்பு இல்லாமல் எந்த மேடையும் ஏறுவதில்லை என்கிற நல்ல பழக்கமுள்ள அவரிடம் உள்ள இன்னொரு நல்ல விஷயம் தன்னைக் கவர்ந்தவர்களுக்கு அவர்கள் தலைவர்களாக இருக்கலாம் ஒரு ரசிகனாகக்கூட இருக்கலாம் தன் கைப்படவே கடிதம் எழுதும் பழக்கம் உள்ளவர்.


Post your comment





Related News
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்
சூர்யாவின் வாழ்வையே மாற்றிய அந்த விமான நிகழ்வு! அதனால்தான் இப்படியுள்ளாரா
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !
இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
அகரம் பவுண்டேஷனுக்காக வாழ்ந்துவந்த வீட்டை தானமாக கொடுத்த சிவகுமார்
பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஆவணப்படத்தை வெளியிட்ட சிவகுமார்
மேடை நாடகங்கள் மூலமே நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன்: சிவகுமார் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions