தண்ணீர் பிரச்சினையை விட்டுவிட்டு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது முக்கியமா? : நடிகர் சிவகுமார் ஆவேசம்

Bookmark and Share

தண்ணீர் பிரச்சினையை விட்டுவிட்டு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது முக்கியமா? : நடிகர் சிவகுமார் ஆவேசம்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் இந்த விவகாரத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் சிவகுமார் பேசும்போது, 

தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன? 

கர்நாடகாவில் மிச்சமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு கொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு பக்கம் பார்த்தால் நீர்பிடிப்பு ஏரியாக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அணை கேரளாவில் இருக்கிறது. 10 அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு அவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள். 

பாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில் குடிதண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி இணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும் இருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். 

செவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட் அனுப்பியிருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா? மக்களுக்கு அடிப்படை தேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு 10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பலாம். 

தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டு வந்து காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடினால், ஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும். இதற்கு இந்தியாவின் பிரதமர்தான் வழிவகுக்கவேண்டும். தமிழக மக்கள் சார்பில் அதை நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.


Post your comment





Related News
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்
சூர்யாவின் வாழ்வையே மாற்றிய அந்த விமான நிகழ்வு! அதனால்தான் இப்படியுள்ளாரா
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !
இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
அகரம் பவுண்டேஷனுக்காக வாழ்ந்துவந்த வீட்டை தானமாக கொடுத்த சிவகுமார்
பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஆவணப்படத்தை வெளியிட்ட சிவகுமார்
மேடை நாடகங்கள் மூலமே நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன்: சிவகுமார் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions