அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் குருதட்சணை திட்டத்துக்கு உதவ வேண்டும்: சிவக்குமார் பேச்சு

Bookmark and Share

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் குருதட்சணை திட்டத்துக்கு உதவ வேண்டும்: சிவக்குமார் பேச்சு

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் குரு தட்சணை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான கணக்கெடுப்பு பணி தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று தொடங்கியது. 

இந்த திட்டத்தின் படி இளம் நடிகர்கள் முதல் மூத்த நடிகர் வரை உள்ள சங்க உறுப்பினர்களின் குடும்ப விவரங்கள், அவர்களின் தனித்திறமைகள், தேவையான கல்வி உதவி, மருத்துவ உதவி போன்ற விவரங்கள் வீடியோவில் எடுக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். 

பின்னர் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். அதன்படி 20 வீடியோ சாதனங்கள் மூலம் நடிகர் சங்க உறுப்பினர்களின் விவரங்கள் இன்று பதிவு செய்யப்பட்டன. 
தொடக்க விழாவில் நடிகர் சிவக்குமார் பேசியதாவது:– 

நடிகர் சங்கம் மிகவும் பாரம்பரியமானது. கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட மூத்த நடிகர்களால் இந்த நடிகர் சங்கம் வளர்ந்துள்ளது. இப்போது இந்த சங்கத்தின் பொறுப்பினை புதியவர்கள் ஏற்றுள்ளனர். அவர்கள் குருதட்சணை திட்டத்தை தொடங்கியுள்ளனர். 

இந்த திட்டம் மூலம் மூத்த கலைஞர்கள், நலிந்த கலைஞர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் இந்த திட்டத்துக்கு தாமாக முன்வந்து உதவ வேண்டும். நான் இந்த திட்டத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். 

நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது:– நடிகர் சங்க தேர்தலில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் குருதட்சணை திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதன்படி நடிகர் சங்க உறுப்பினர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்படும். அவர்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவிகள் வழங்கப்படும். 

நடிகர் சங்கத்தில் இருந்து ஏற்கனவே சிலர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் சங்கத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கு மனு கொடுத்துள்ளனர். அவர்களின் மனுவை பரிசீலனை செய்து பெரிய குற்றம் இல்லையென்றால் சேர்த்துக் கொள்வோம். மார்ச் மாதம் முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் ராஜேஷ், மனோபாலா, மன்சூர் அலிகான், உதயா, ஜே.கே.ரித்தீஸ், பூச்சிமுருகன், நந்தா, அஜய்ரத்னம், ஹேமச்சந்திரன், அயூப்கான், நடிகைகள் சச்சு, மேனகா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இன்று முதல் வருகிற 31–ந்தேதி வரை சென்னையில் நடிகர் சங்க உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும். அடுத்த மாதம் 9 மற்றும் 10–ந்தேதிகளில் வெளி மாவட்டங்களில் வசிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும்.


Post your comment





Related News
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்
சூர்யாவின் வாழ்வையே மாற்றிய அந்த விமான நிகழ்வு! அதனால்தான் இப்படியுள்ளாரா
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !
இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
அகரம் பவுண்டேஷனுக்காக வாழ்ந்துவந்த வீட்டை தானமாக கொடுத்த சிவகுமார்
பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஆவணப்படத்தை வெளியிட்ட சிவகுமார்
மேடை நாடகங்கள் மூலமே நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன்: சிவகுமார் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions