மீண்டும் முகநூலுக்குத் திரும்பும் சிவகுமார்

Bookmark and Share

மீண்டும் முகநூலுக்குத் திரும்பும் சிவகுமார்

தீரன் சின்னமலை பற்றி தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிவகுமார் எழுதிய கருத்துக்களுக்கு கடும் விமர்சனங்களும், சில சாதீய மோதல்களும் எழுந்ததைத் தொடர்ந்து முகநூலை விட்டு விலகுவதாக நடிகர் சிவகுமார் அறிவித்தார்.

ஆனால், அவரது விலகல் அறிவிப்புக்கு பலர் ஆதரவு தெரிவிக்கவில்லை. அவருடைய முகநூல் பக்கத்திலேயே மீண்டும் வர வேண்டும், பல பதிவுகளைப் போட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த வண்ணம் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தன்னுடைய விலகல் முடிவை நடிகர் சிவகுமார் மறுபரிசீலனை செய்துள்ளார். விரைவில் அனைவரையும் சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகநூலில் சற்று முன் அவர் போட்ட பதிவு...“ வரலாற்று ஆய்வாளர் சகோதரி நிகிலா நிகி அவர்களும் மற்ற சகோதரர்களும் குறிப்பிட்டது போல போர்ப்படைத் தளபதி கருபன் சேர்வைத் தேவரை கையாள் என்று தவறுதலாக எழுதியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் .

நான் வரலாற்றை இன்னும் தெளிவாக படிக்க வேண்டும். முகநூலில் என் பதிவுகள் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த ஆயிரக்கணக்கான கணக்கான தமிழ் நெஞ்சங்களையும் விமர்சனம் செய்த தம்பிகளையும் விரைவில் சந்திப்பேன். நன்றி,” என அவர் பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்
சூர்யாவின் வாழ்வையே மாற்றிய அந்த விமான நிகழ்வு! அதனால்தான் இப்படியுள்ளாரா
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !
இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
அகரம் பவுண்டேஷனுக்காக வாழ்ந்துவந்த வீட்டை தானமாக கொடுத்த சிவகுமார்
பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஆவணப்படத்தை வெளியிட்ட சிவகுமார்
மேடை நாடகங்கள் மூலமே நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன்: சிவகுமார் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions