நல்ல வேளை என் காலத்துல அல்லு அர்ஜூன் நடிக்க வரல! – சிவகுமார்

Bookmark and Share

நல்ல வேளை என் காலத்துல அல்லு அர்ஜூன் நடிக்க வரல! – சிவகுமார்

தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக 1௦வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 12வது தயாரிப்பான அல்லு அர்ஜுன் நடிக்கும் இயக்குநர் லிங்குசாமி இயக்கும் திரைப்படத்தின் அறிவிப்புக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் நடிகர் அல்லு அர்ஜுன் , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் சிவகுமார் , நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ் , எழுத்தாளர் கவிஞர் பிருந்தா சாரதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் நடிகர் சிவகுமார் பேசியது , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கார்த்தியுடன் படித்தவர் , அவர் இன்று மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கிறார். அவர் சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

அவர் இவ்வளவு பெரிய தயாரிப்பாளராகி சூர்யா கார்த்தி ஆகியோரை வைத்து திரைப்படத்தை தாயரிப்பார் என்று நான் நினைத்ததில்லை. இப்போது அவரை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து படங்களை தயாரித்த அவர் தற்போது அல்லு அர்ஜுனை வைத்து தமிழ் தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கும் , தெலுங்கு சினிமாவுக்கும் பல வருடங்களாக நல்ல தொடர்பு இருந்து வருகிறது. எம். ஜி .ஆர் , சிவாஜி ஆகியோர் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அதே காலகட்டத்தில் என்.டி.ஆர் , நாகேஷ்வர ராவ் ஆகியோரும் இங்கே மக்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்று இங்கும் வெற்றி படங்களை கொடுத்து வந்தனர்.
அல்லு அர்ஜுன் மிகவும் அழகாக உள்ளார் , அவருக்கு கண் , காது மூக்கு என அனைத்தும் அழகாக உள்ளது. நல்ல வேளை அவர் 1960ல் நடிக்க வரவில்லை அப்படி வந்திருந்தால் எனக்கு போட்டியாக வந்திருப்பார்.

முருகர் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று அக்காலத்தில் என்னை தேர்வு செய்தனர். இவர் அக்காலத்தில் இருந்திருந்தால் இவரை தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார் நடிகர் சிவகுமார்.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions