சிவப்பு தாமதம் ஏன்?

Bookmark and Share

சிவப்பு தாமதம் ஏன்?

கழுகு படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சத்யசிவா. கொடைக்கானல் மலையில் தற்கொலை செய்து கொள்கிறவர்களின் உடலை மீட்கும் ஒரு சமூகத்து மக்களின் வாழ்க்கையை சொன்னார்.

தற்போது அவர், சவாலே சவாளி என்ற காமெடி படத்தை இயக்கி வருகிறார். இதற்கு இடையில் அவர் இயக்கிய சிவப்பு என்ற படம் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. இதில் நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்துள்ளனர். பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ் சார்பில் முக்தா ஆர்.கோவிந்தும், புன்னகை பூ கீதாவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இது தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகளை பற்றிய படம். வெளிநாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள் இன்னும் ரேசன் அரிசியையும். அரசு உதவியையும் எதிர்பார்த்து முகாம்களில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் நல்ல நிலைக்கு வரலாம் என்று நினைக்கும் அகதிகளை தமிழ்நாட்டு சக்திகள் எந்த அளவுக்கு வதைக்கின்றன என்கிற உண்மையை பேசுகிற படம்.

இந்த படத்தை வெளியிட பல்வேறு அதிகார மையங்களிலிருந்து பல எதிர்ப்புகள் இருப்பதாகவும் அதனால் படம் வெளிவராமல் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதில் நடித்திருக்கும் ராஜ்கிரணே படத்தை வாங்கி வெளியிட திட்டமிட்டதாகவும் அதனை சிலர் தடுத்ததாகவும் கூறுகிறார்கள்.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தின் தெலுங்கு உரிமமும் விற்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் சிவப்பை வெளிவர விடாமல் தடுக்கும் சக்தி எது என்று தெரியவில்லை.


Post your comment





Related News
இந்த ஜனநாயக நாட்டில் ‘ஈழம்’ என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியாது! : குமுறிய ராஜ்கிரண்
இன்னுமொரு இலங்கை தமிழர் படம்
தணிக்கை குழுவில் அரசியல்வாதிகள்: ராஜ்கிரண் குற்றச்சாட்டு
சிவப்பு தாமதம் ஏன்? இயக்குனர் சத்யசிவா விளக்கம்
ராஜ்கிரண், நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி நடிக்கும் “சிவப்பு”
சிவப்பு ரோஜாக்கள் ரீமேக் - மனோஜ் கே.பாரதி இயக்குகிறார்
சிவப்பு ரோஜாக்கள் 2–ம் பாகம் எடுப்பேன் –பாரதிராஜா
‘கோணார்’ கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண்..!
என்னது விஷாலும் லட்சுமி மேனனும் ஒரே அறையில் தங்கி இருந்தாங்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions