சிவப்பு தாமதம் ஏன்? இயக்குனர் சத்யசிவா விளக்கம்

Bookmark and Share

சிவப்பு தாமதம் ஏன்? இயக்குனர் சத்யசிவா விளக்கம்

கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா அடுத்து இயக்கியுள்ள படம் சிவப்பு. முக்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் முக்தா ஆர்.கோவிந்த் தயாரித்துள்ளார். நவீன் சந்த்ரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்துள்ளனர். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தயாராகி ஒரு வருடம் ஆகிவிட்டது.

ஆனால் வெளியாகாமல் தாமதமாகி வந்தது. தற்போது தயாரிப்பாளரின் நண்பர் தேசிகன் வாங்கி தனது எஸ்.எஸ்.மீடியா சார்பில் வெளியிடுகிறார்.

படம் தாமதமான காரணம் குறித்து இயக்குனர் சத்யசிவா கூறியதாவது: இந்தப் படம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதியாக வரும் ஒரு இலங்கை தமிழ் பெண்ணுக்கும், தமிழ்நாட்டு தமிழ் இளைஞனுக்கும் உள்ள காதலை சொல்லும் படம்.

இவர்கள் காதல் வழியாக தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகள் படும் இன்னலை சொல்கிறோம். காதலர்களின் காட்பாதராக ராஜ்கிரண் நடித்துள்ளார். இலங்கை அரசியல் குறித்தோ, விடுதலைப்புலிகள் குறித்தோ, இலங்கை பிரச்சினையில் இந்திய அரசின் நிலைப்பாடு குறித்தோ படத்தில் பேசவில்லை.

என்றாலும் தணிக்கை குழுவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த கூடாது என்பதற்காக பல காட்சிகளை மறுபடப்பிடிப்பு செய்தேன். அதற்கு கூடுதல் செலவும், கூடுதல் நாட்களும் ஆனது.

அதன்பிறகு தணிக்கை குழு எந்த கட்டும் கொடுக்காமல் யூ சான்றிதழ் கொடுத்தது. தயாரிப்பாளர் கோவிந்த் சாரின் திடீர் மரணம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் 6 மாதம் வரை படத்தின் எந்த பணிகளும் நடக்கவில்லை.

தற்போது அவரது சகோதரர்களும், மகளும் படத்தை கையில் எடுத்து வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள். இப்படி அடுத்தடுத்து வந்த சில விஷயங்களால் படம் தாமதமாகிவிட்டது. ஆனால் படம் எப்போது வெளிவந்தாலும். அது தமிழ் மக்களின் மனசாட்சியை உலுக்குகிற படமாக இருக்கும். என்கிறார் சத்யசிவா.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions