சிவரஞ்சனி மகனை அறிமுகம் செய்யும் நாகர்ஜுனா

Bookmark and Share

சிவரஞ்சனி மகனை அறிமுகம் செய்யும் நாகர்ஜுனா

சிவரஞ்சனி யார் என்பது இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1991ம் ஆண்டு வெளிவந்த மனசார வாழ்த்துங்களேன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர். 

அதன் பின் பிரபுவுடன் சின்ன மாப்ளே, ரஞ்சித்துடன் பொன்விலங்கு, கமல்ஹாசனுடன் கலைஞன், அரவிந்த்சாமியுடன் தாலாட்டு, விஜயகாந்துடன் ராஜதுரை, கார்த்திக்குடன் காத்திருக்க நேரமில்லை, சரத்குமாருடன் அரண்மனைக் காவலன், சத்யராஜுடன் வண்டிச்சோலை சின்ராசு, பிரசாந்துடன் ராசாமகன், செந்தமிழ்ச் செல்வன், உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார்.

அதன் பின் தமிழிலிருந்து தெலுங்கிற்குப் போய்  சில படங்களில் நாயகியாக நடித்த சிவரஞ்சனி தெலுங்கு நடிகரான ஸ்ரீகாந்துடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள்கள். 

அவர்களில் மூத்த மகனான ரோஷன் தற்போது நாயகனாக அறிமுகமாக உள்ளார். நாகார்ஜுனா அவருடைய சொந்த நிறுவனம் சார்பாக தயாரித்துள்ள நிர்மலா கான்வென்ட் படத்தில் ரோஷன் நாயகனாக அறிமுகமாகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்ட நிலையில் படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் இறங்கிவிட்டார் நாகார்ஜுனா. ரோஷன் இதற்கு முன் ருத்ரமாதேவி படத்தில் ராணா டகுபதியின் சிறுவயது தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions