சவாலே சமாளி பாடல் படப்பிடிப்பை அடம்பிடித்து பார்த்த எஸ்.ஜே.சூர்யா

Bookmark and Share

சவாலே சமாளி பாடல் படப்பிடிப்பை அடம்பிடித்து பார்த்த எஸ்.ஜே.சூர்யா

தெகிடி, பீட்சா 2 ஆகிய படங்களில் நடித்த அசோக் செல்வன், தற்போது நடித்து வரும் படம் ‘சவாலே சமாளி’. இதில் பிந்துமாதவி இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ஜெகன், நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை நடிகர் அருண்பாண்டியன் வழங்க, ஏ ஆண்ட் பி குரூப்ஸ் சார்பாக கவிதா பாண்டியன், எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கின்றனர். சத்யசிவா இப்படத்தை இயக்கியுள்ளார். கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ‘நல்லவனா கெட்டவனா ஆம்பள தெரியாமத் தான் தவிக்கிறாடா பொம்பள...’ என்ற பாடலை உருவாக்குவதற்கு முன்பாகவே எஸ்.ஜே.சூர்யா கேட்டிருக்கிறார்.

இந்த பாடல் எஸ்.ஜே.சூர்யாவிற்கு பிடித்துப் போக, இந்த பாடலின் படப்பிடிப்பு எப்போது, எங்கு நடந்தாலும் சொல்லுங்கள் நான் வந்து பார்க்கணும் என்று இயக்குனரிடம் கேட்டிருக்கிறார். அதுபோல் இப்பாடலை மகாபலிபுரம் அருகே படமாக்கப்படும் போது எஸ்.ஜே.சூர்யா வந்து படப்பிடிப்பை பார்த்து பாராட்டி சென்றிருக்கிறார்.

நடிகை லஷ்மி மகள் ஐஸ்வர்யா முதன் முதலாக இந்த படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடியிருக்கிறார். செப்டம்பர் மாதம் 4ம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது.


Post your comment





Related News
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
மெர்சலில் இந்த காட்சியை பார்த்து திரையரங்கமே அதிரும் - வெளிவந்த மெர்சல் ரகசியம்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி விஜய் தான் அடுத்த தமிழக முதல்வராக வேண்டும் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
மெர்சல் மன்னன் வருகையால் தெறித்த ஓடிய சூப்பர் ஸ்டார் படம் - அதிர போகும் பாக்ஸ் ஆபீஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions