குஷி-2 க்கு தயாரான எஸ்.ஜே.சூர்யா ?

Bookmark and Share

குஷி-2 க்கு தயாரான எஸ்.ஜே.சூர்யா ?

வாலி, குஷி என்ற இரண்டு படங்கள் மூலம் அஜித்துக்கும், விஜய்க்கும் மிகப் பெரும் திருப்புமுனையைக் கொடுத்தவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. தெலுங்கிலும் கூட குஷி படத்தை பவன் கல்யாண் வைத்து ரீமேக் செய்து அப்போது அவருக்கும் பெரிய திருப்புமுனையைக் கொடுத்திருந்தார். அதன் பின் ஹீரோவாக ஆசைப்பட்டவர் “நியூ, அன்பே ஆருயிரே, இசை” ஆகிய படங்களை இயக்கி நாயகனாகவும் நடித்தார். 

அது மட்டுமல்லாது மேலும் சில படங்களில் நாயகனாக மட்டும் நடித்தார். தானே நடித்து இயக்கிய படங்கள் வாலி, குஷி படங்களுக்குப் பெற்ற வெற்றியைப் போல் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வெற்றி தரவில்லை. தஏபோது எஸ்.ஜே.சூர்யா நடிப்பதை விட்டுட்டு இயக்க மட்டும் செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறாராம். 

குஷி படத்தைப் போன்றே மீண்டும் ஒரு சுவாரசியமான காதல் கதை ஒன்றை எழுதி வருகிறாராம். அந்தப் படம் அனேகமாக குஷி படத்தின் இரண்டாம் பாகமாகக் கூட இருக்கலாம் என்று தெரிகிறது.

தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலேயே நடித்து வரும் விஜய் இந்தப் படத்தில் நடித்தால் மாற்றம் ஏற்படும். தெலுங்கிலும் பவன் கல்யாண் நடிக்கத் தயாராகவே இருக்கிறார் என்றும் தெரிகிறது. மீண்டும் ஒரு குஷியான வெற்றியை தமிழ், தெலுங்கிலும் கொடுக்கும் முனைப்புடன் சூர்யா இறங்கியுள்ளார்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions