இறைவி படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய எஸ்.ஜே.சூர்யா

Bookmark and Share

இறைவி படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய எஸ்.ஜே.சூர்யா

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு நேற்று பிறந்தநாள். இவர் தன்னுடைய பிறந்தநாளை இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘இறைவி’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது, இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, கருணாகரன், அஞ்சலி ஆகியோர் உடனிருந்தனர். 

‘ஜிகர்தண்டா’ படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பாராஜ் ‘இறைவி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனது முதல் படத்தின் ஹீரோ விஜய்சேதுபதியையும், இரண்டாவது படத்தின் ஹீரோ பாபி சிம்ஹாவையும் சேர்ந்து நடிக்க வைத்துள்ளார். 

மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், கருணாகரனும் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அஞ்சலி இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தனது முந்தைய படங்களைவிட இப்படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைக்க கார்த்திக் சுப்பாராஜ் முழு முயற்சியுடன் களமிறங்கியிருக்கிறார்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions