எஸ்.ஜே.சூர்யாவை இயக்கும் செல்வராகவன்!

Bookmark and Share

எஸ்.ஜே.சூர்யாவை இயக்கும் செல்வராகவன்!

இசை படத்தின் தோல்வி காரணமாக தற்காலிகமாக படம் இயக்கப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் எஸ்.ஜே.சூர்யா. இதனால் வை ராஜா வை என்ற படத்தில் ஒரு ஆட்டோக்காரன் பாடலில் தோன்றி நடனமாடினார். பின்  யட்சன், 144 போன்ற படங்களில் நடித்தார். 

இப்போது இறைவி உள்பட சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிம்புவை வைத்து கான் படத்தை இயக்கி பின்னர் அதை கிடப்பில் போட்ட செல்வராகவன், அடுத்து எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் வந்துள்ளன.

கான் படத்தை கிடப்பில் போட்ட பிறகு தனது மனைவி கீதாஞ்சலி இயக்கி வந்த மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு கதை வசனம் எழுதியதோடு, மனைவிக்காக இயக்கத்திலும் உதவி வந்தார் செல்வராகவன். 

மேலும் அவரிடைய தம்பி தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்க இருந்தார். ஆனால் தனுஷின் கைவசம் பல படங்கள் இருப்பதால் அவரால் செல்வராகவனுக்கு கால்சீட் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார்.

அதனால், அவருக்காக காத்திருக்க வேண்டாம் என்பதற்காக எஸ்.ஜே.சூர்யாவிடம் ஒரு கதையை சொல்லி ஓகே பண்ணிவிட்டாராம் செல்வராகவன். விரைவில் அந்த படம் குறித்து அதிகாரபூர்வமாக தகவல்கள் அறிவிப்பார்கள்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions