பவன் கல்யாண், எஸ்.ஜே.சூர்யா இனையும் படம் பூஜையுடன் தொடங்கியது!

Bookmark and Share

பவன் கல்யாண், எஸ்.ஜே.சூர்யா இனையும் படம் பூஜையுடன் தொடங்கியது!

அஜித் நடித்த ‘வாலி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து ‘குஷி’ என்னும் படத்தை இயக்கினார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்தும், இந்தியில் பார்தீன் கானை வைத்தும் இயக்கினார்.

இதில் பவன் கல்யாண் நடித்த குஷி படம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பிறகு தமிழில் கவனம் செலுத்திய எஸ்.ஜே.சூர்யா சிறிது இடைவெளியில், மீண்டும் பவன் கல்யாணை வைத்து ‘புலி’ என்னும் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2010ம் ஆண்டு வெளியானது.

தற்போது மீண்டும் பவன் கல்யாணை வைத்து படம் இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. இவர்கள் கூட்டணியில் புதிதாக உருவாக இருக்கும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே உருவான ‘குஷி’ படம் 2001ம் ஆண்டு இதேநாளில் (ஏப்ரல் 27) வெளியானது. இந்த நாளை சென்டிமென்ட்டாக வைத்து புதிய படத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘இறைவி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
மெர்சலில் இந்த காட்சியை பார்த்து திரையரங்கமே அதிரும் - வெளிவந்த மெர்சல் ரகசியம்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி விஜய் தான் அடுத்த தமிழக முதல்வராக வேண்டும் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
மெர்சல் மன்னன் வருகையால் தெறித்த ஓடிய சூப்பர் ஸ்டார் படம் - அதிர போகும் பாக்ஸ் ஆபீஸ்.!
சமீபத்தில் வெளியான படங்களிலேயே இது தான் செம படம் - புகழும் மெகா ஹிட் நடிகர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions