கடத்தல் குற்ற வழக்கில் பிரபல மாடல் நடிகை கைது!

Bookmark and Share

கடத்தல் குற்ற வழக்கில் பிரபல மாடல் நடிகை கைது!

தெலுங்கு சினிமாவின் பிரபல மாடல் மற்றும் நடிகை சங்கீதா சட்டர்ஜீ நேற்று ஆந்திராவின் சித்தூர் போலிசாரால் கைதுசெய்யப்பட்டு இன்று கொல்கத்தாவிலிருந்து அழைத்து வரப்பட்டார்.

மூன்று வருடங்களுக்கு முன் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் இவரின் கணவர் லக்‌ஷ்மன் கைதானார் . தொடர் விசாரணையில் இதில் சங்கீதாவுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்தது.

அந்த சமயத்தில் சங்கீதா கைது செய்யப்பட்டாலும் கொல்கத்தா நீதிமன்றம் அவருக்கு பெயில் மூலம் வெளியே வர அனுமதித்தது. ஆனால் அவருக்கு நேரில் ஆஜராக 6 முறை

சம்மன் அனுப்பியும் வராததால் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவரை கொல்கத்தா விரைந்து தனிப்படை போலிசார் கைது செய்தனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions