நடிப்பதை விட பாடல் எழுதுவது தான் சுதந்திரம்: கவிஞர் சினேகன்

Bookmark and Share

நடிப்பதை விட பாடல் எழுதுவது தான் சுதந்திரம்: கவிஞர் சினேகன்

சீர்காழி பகுதியில் ‘எதிர்கொள்’ என்ற திரைப்பட படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பாடலாசிரியர் சினேகன் கூறியதாவது:–

நான் இதுவரை தமிழ் சினிமாவில் இரண்டாயிரத்து ஐநூறு பாடல்கள் எழுதியுள்ளேன். 7 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். நடிப்பதை விட பாடல் எழுதுவதுதான் பிடித்துள்ளது.

பாடல் எழுதும்போது அதற்கு நான் முதலாளி. படத்தின் கதைக்கு ஏற்ப சிந்தனையில் உதிக்கும் வரிகளை கோர்த்து பாடல்களை சுதந்திரமாக எழுத முடியும். ஆனால் கதாநாயகன் என்னும்போது இயக்குனருக்கு கட்டுபட்டு நடிக்கவேண்டும்.

தற்போது தமிழ் சினிமாவுக்கு பாடல்கள் எழுத வருபவர்கள் தமிழ் புலமை இல்லாமல், தமிழ் இலக்கியம் தெரியாமல் பாடல் எழுதுகிறார்கள். இது வேதனையளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions