மோசமான பாடலையும் பிரபலமாக்குவது நாம் தான்: சினேகா

Bookmark and Share

மோசமான பாடலையும் பிரபலமாக்குவது நாம் தான்: சினேகா

இணைய தளத்தில் வெளியான சிம்புவின் ஆபாச பாடல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதனால் சிம்புவும், அதற்கு இசை அமைத்ததாக கூறப்படும் அனிருத்தும் பல்வேறு அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்பின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளனர். 

இந்த பாடல் பற்றிய கருத்துக்களால் அதை கேட்க விரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ‘வாட்ஸ்–அப்’மூலம் இந்த பாடல் முன்பைவிட வேகமாக பரவி வருகிறது. 

இதுகுறித்து கருத்து சொன்ன சினேகா... ஒரு பாடலை பிரபலமாக்குவது நாம்தான். பெண்களை பெருமையாக வர்ணிக்கும் பாடல்களும் இருக்கின்றன. ‘அடிடா... அவள’ என்பது போன்ற பாடல்களும் வந்து இருக்கின்றன. இதையெல்லாம் யாரும் கண்டு கொள்ளவில்லை. 

இதை நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஒரு பாடலை பற்றி நாம் திரும்பத் திரும்ப பேசுவதால் அதை பிரபலமாக்கிவிடுகிறோம். அந்த பாடல் ஹிட் ஆக நாம் காரணமாக இருக்கிறோம். தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் பாடலை நான் இதுவரை கேட்கவில்லை. பலர் என்னிடம் அது பற்றி கேள்வி கேட்பதால் அந்த பாடலை கேட்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் வந்திருக்கிறது. 

அது தவறான பாடல் என்று தெரிந்த பிறகும் அது பற்றி ஏன் மீண்டும் மீண்டும் பேச வேண்டும். பேசாமல் விட்டு விட்டாலே அந்த பாடல் பற்றிய பேச்சே வந்திருக்காது. என்றாலும் ஆபாச பாடல் என்பதால் ஒரு பெண் என்ற முறையில் இதுபோன்ற பாடல்களை எதிர்க்கிறேன்.

குழந்தைகளும் பாடல்களை கேட்கிறார்கள். எனவே மோசமாக பாடல்களை கேட்கிறார்கள். எனவே மோசமான வரிகளை பாடல்களில் திணிக்க வேண்டாம் என்றார்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கடுமையான உடற்பயிற்சி செய்யும் சினேகா - வைரலாகும் வீடியோ!
நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!
சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி
சிநேகாவிடம் மனிப்பு கேட்ட வேலைக்காரன் பட இயக்குனர் - ஏன்? என்ன நடந்தது தெரியுமா?
அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?
பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!
மேடையிலேயே இதை சொல்லி இருப்பேன், ஆனால் - வேதனைப்படும் சினேகன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions