தன் பிறந்த நாளில் கண்கலங்கிய சினேகா

Bookmark and Share

தன் பிறந்த நாளில் கண்கலங்கிய சினேகா

புன்னகை இளவரசி சினேகா தனது பிறந்த நாளை இன்று திறன்குன்றியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

 ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலும், அல்லது திறன்குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடி வருகிறார். இது வருடம் தவறாமல் நடந்து வருகிறது. 

சமீபத்தில் விஹான் என்ற ஆண் குழந்தைக்குத் தாயான பின்பு வெளியே எங்கும் தலை காட்டாமல் இருந்து வந்தார் சினேகா. இன்று அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி கொளத்தூரில் உள்ள ஸ்ரீ அருணோதயம் சாரிட்டபிள் ட்ரஸ்ட்டில் உள்ள மன  நலம் குன்றிய குழந்தைகள் நடுவே தனது கணவர் பிரசன்னாவுடன் வந்து கொண்டாடினார். அவர்களுக்கு கேக் ஊட்டியும் உணவு பரிமாறியும் மகிழ்ந்தார். 

நிறைவாக ட்யூப் மூலமாக உணவு பெற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள குழந்தைகள் நிரம்பிய அறைக்கு சென்ற சினேகா அவர்களின் நிலையைப் பார்த்ததும் தாங்க முடியாமல் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். மகிழ்வாக கொண்டாட வந்தவர் அழத்தொடங்கியதும் அங்கு பணிபுரிந்த  ஊழியர்களும் கலங்கிவிட்டனர்.

பின் பிரசன்னா  அவரைத் தேற்றி அழைத்து வந்து காரில் உக்கார வைத்து அழைத்துச் சென்றார்.


Post your comment

Related News
திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!
சினேகாவின் தற்போதைய ஃபேவரிட் ஹீரோ யார் தெரியுமா?
கணவன் வில்லனாக! மனைவி குணசித்திர வேடமாக களம் இறங்கும் சினேகா - பிரசன்னா!
நட்சத்திர ஜோடியின் குழந்தை பெயர் தேர்வு!
தாயான பிறகு சினேகாவின் முதல் டுவீட்
ஆகஸ்ட் மாதத்தில் அம்மா ஆகிறார் சினேகா!
நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி –சினேகா
சினேகா-பிரசன்னாவுக்கு அதிர்ச்சி கொடுத்த படத்தயாரிப்பு!
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சினேகா-பிரசன்னா தம்பதியினர்
சினேகாவின் கழுத்தில் இரு முறை தாலி கட்டுவேன்: பிரசன்னா பேட்டி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions