எளிமையாக நடைபெற்ற நடிகை சினேகாவின் வளைகாப்பு

Bookmark and Share

எளிமையாக நடைபெற்ற நடிகை சினேகாவின் வளைகாப்பு

நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப்பின் சினேகாவும், பிரசன்னாவும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள். சினேகா இப்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

7 மாத கர்ப்பிணியான சினேகாவுக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு நடந்தது. சினேகாவின் தந்தை ராஜாராம், தாயார் பத்மாவதி, பிரசன்னாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாயார் புவனேஸ்வரி மற்றும் நெருங்கிய உறவினர்கள், வளைகாப்பில் கலந்துகொண்டார்கள். நடிகர்கள் சிபிராஜ், நரேன், நடிகைகள் மீனா, சங்கீதா, பாடகர் கிருஷ், டைரக்டர் ஹரியின் மனைவி பிரீதா ஹரி ஆகியோர் வளைகாப்புக்கு வந்து சினேகா-பிரசன்னா ஜோடியை வாழ்த்தினார்கள்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
கடுமையான உடற்பயிற்சி செய்யும் சினேகா - வைரலாகும் வீடியோ!
நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!
சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி
சிநேகாவிடம் மனிப்பு கேட்ட வேலைக்காரன் பட இயக்குனர் - ஏன்? என்ன நடந்தது தெரியுமா?
அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?
2G வழக்கு தீர்ப்பு பற்றி பிரபல நடிகரின் அதிரடி பதிவு.!
பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions