மூன்று இளைஞர்களை ரொமான்ஸ் பண்ணும் சினேகா..!

Bookmark and Share

மூன்று இளைஞர்களை ரொமான்ஸ் பண்ணும் சினேகா..!

திருமணமாகி செட்டிலாகிவிட்ட சினேகா, மீண்டும் நடிக்க வந்தாலே ஆச்சர்யம்.. இதில் மூன்று இளைஞர்களை ரொமான்ஸ் பண்ணும் கதையா என உங்கள் மனதில் எழும் கேள்வியை உடனே ரப்பர் வைத்து  அழித்து விடுங்கள்.

இது 'குஞ்சிராமாயணம்' என்கிற மலையாளப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள சினேகா உன்னிகிருஷ்ணன் பற்றிய தகவல்.. பஷில் ஜோசப் இயக்கும் இந்தப்படத்தில் வினீத் சீனிவாசன், அவரது தம்பியான தயன் சீனிவாசன் மற்றும் அஜு வர்கீஸ் என மூன்று பேர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

இதில் கதைப்படி தயன் சீனிவாசனுக்கும் சினேகாவுக்கும் தான் லவ்.. ஆனால் திருமணம் நிச்சயமாவதோ வினீத் சீனிவாசனுடன்.. இறுதியில் திருமணம் நடப்பதோ அஜு வர்கீசுடன்.. இது எப்படி இருக்கு..? எண்பதுகளில் நடக்கும் கதையாக இந்தப்படம் தயாராகிவருகிறது.

இந்தப்படத்தில் அஜு வர்கீசுடன் நடிக்கும் காட்சிகளில் தான் மிகுந்த சிரமப்பட்டாராம் சினேகா.. பின்னே இயல்பிலேயே காமெடி நடிகரான அஜு வர்கீஸ் ஸ்பாட்டில் கேமரா முன்னாடி நின்றதும் சில புதுப்புது பிட்டுகளை எடுத்துப்போட,சிரிப்பை அடக்கமுடியாமல் பலமுறை டேக் வாங்கினாராம் சினேகா உன்னிகிருஷ்ணன்.

ஆமாம்.. பாலா படத்தை முடித்துவிட்டு சசிகுமார் அடுத்ததாக படத்தில் நடிக்கப்போகிறாரா அல்லது படத்தை இயக்கப்போகிறாரா..? சம்பந்தமில்லாமல் எதற்கு இந்த கேள்வி என்கிறீர்களா..? அவர் நடித்தாலும் இயக்கினாலும் அந்தப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பவர் இந்த சினேகா உன்னிகிருஷ்ணன் தான்..

 

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions