ஜீ தமிழ் டிவியில் ‘டான்சிங் கில்லாடிஸ்’! ... நடுவர்களாக சினேகா, சுதாசந்திரன்

Bookmark and Share

ஜீ தமிழ் டிவியில் ‘டான்சிங் கில்லாடிஸ்’! ... நடுவர்களாக சினேகா, சுதாசந்திரன்

ரசிகர்களின் மனம் கவர்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "டான்ஸிங் கில்லாடிஸ்" எனும் புதுமையான டான்ஸ் ரியாலிட்டி ஷோ நாளை பிப்ரவரி 18 முதல் சனி தோறும் இரவு 8:30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. ஜீ தமிழின் புகழ் பெற்ற "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை மெய்மறக்கச் செய்த நடனக் கலைஞர்கள், டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியிலும் நடுவர்களாக சினேகாவும், சுதா சந்திரனும் பங்கேற்கின்றனர்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிற டான்ஸ் ஷோக்களில் இருந்து மாறுபட்டு சின்னத்திரை உலகின் புதுமையான நிகழ்ச்சியாக டான்ஸிங் கில்லாடிஸ் உருவாகியுள்ளது. நடனத்தை மையப்படுத்திய சாகச நிகழ்ச்சியாக டான்ஸிங் கில்லாடிஸ் உருவாகியுள்ளது.

வழக்கமான நடன அரங்குகளுக்கு மாற்றாக வியத்தகு புதுமையான தளங்களில் நடனமாடவுள்ள கலைஞர்கள், நடனத்தின்போது எதிர்பாரா சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிலம், நீர் மற்றும் அந்தரத்தில் நடனமாடவுள்ள கலைஞர்கள், தாங்கள் சந்திக்கும் எதிர்பாராத சவால்களை எதிர்கொண்டு நிலை குலையாமல் தொடர்ச்சியாக நடனமாடித் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு அழைத்து வரவுள்ள இந்நிகழ்ச்சியை, ஜீ தமிழின் உச்சகட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான `மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் கில்லாடிஸ் கேம் ஷோ மற்றும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் தீபக் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் தொகுத்து வழங்க உள்ளார்.

ரசிகர்களை வசீகரிக்கக் கூடிய நட்சத்திர நடுவர்கள் இந்நிகழ்ச்சியை மேலும் அலங்கரிக்க உள்ளனர். தென்னிந்திய சினிமாவில் விரும்பப்படும் நடிகையாக புகழ்பெற்ற சினேகா மற்றும் பிரபல நடிகையும், நடனக் கலைஞருமான சுதா சந்திரன் ஆகியோர் டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

பிரபல நடனக் கலைஞர்கள், முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நடனக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாளை பிப்ரவரி 18 முதல் வாரம் தோறும் சனிக்கிழமை இரவு 8:30 முதல் 10 மணி வரை டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. காணத் தவறாதீர்கள்!


Post your comment

Related News
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
சிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக்
சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்
என்னை போல் வேறு யாரையும் ஏமாற்றாதீர்கள்- கோபிநாத் செய்த செயலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இளம்பெண்
சிம்பு படத்தில் இந்திய சினிமாவில் முதன்முறையாக நடக்கும் ஸ்பெஷல் விஷயம்
மக்களுக்கு விவசாயம் தெரியும்யா- கோபிநாத் பதிலடி
சிம்பு ரசிகர்களுக்கு இன்று அஸ்வின் தாத்தா ஸ்பெஷல்- இயக்குனர் வெளியிட்ட தகவல்
சிம்புவை சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்திய பிரபல இயக்குனர்
குடியரசு தினத்தை கொண்டாடக்கூடாது! சிம்பு இயக்குனர் ஆதிக் அதிரடிAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions