சினேகன் ஹீரோவாக நடிக்கும் ராஜராஜ சோழனின் போர்வாள் படம் ட்ராப்பா.?!

Bookmark and Share

சினேகன் ஹீரோவாக நடிக்கும் ராஜராஜ சோழனின் போர்வாள் படம் ட்ராப்பா.?!

ஆசை யாரைவிட்டது என்பதுபோல், முன்னணி பாடலாசிரியராக இருந்த பா.விஜய்க்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை ஏற்பட்டது. அதனால் அவருக்கு பேரும் புகழைக் கொடுத்த பாடலாசிரியர் ஸ்தானம் பறிபோனது.

வருடத்துக்கு ஒன்றிரண்டு பாடல்கள் எழுதும் நிலைக்குத்தள்ளப்பட்டார் பா.விஜய். இவராவது பரவாயில்லை... என்கிற அளவுக்கு சினேகனின் நிலை இன்னும் மோசம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் மாற்றங்கள் போன்ற நல்ல பாடல்களையும், கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஒடிப்போலாமா போன்ற கெட்ட பாடல்களையும் எழுதிய சினேகன் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக இருந்தார். பா.விஜய்க்கு வந்ததுபோலவே இவருக்கும் ஹீரோவாக நடிக்கும் ஆசை  வந்தது.

அதற்குமுன் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் அடியாளாக நடித்தார். அதன் பிறகு உயர்திரு 420 என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் படம் சூப்பர் ப்ளாப்! பிறகு, ரணம் என்ற படத்தில் நடித்தார் அந்தப்படம் இன்னும் வெளிவரவில்லை.

2012 ஆம் ஆண்டில் ராஜராஜ சோழனின் போர்வாள் என்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதாக விளம்பரங்கள் செய்து படத்துக்கு பூஜை போட்டார் சினேகன். பூஜை போட்டதோடு சரி... ராஜராஜ சோழனின் போர்வாள் படம் ட்ராப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது கண்டதும் சுடு, களத்தில் வென்றான் என இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சினேகன்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி
பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!
மேடையிலேயே இதை சொல்லி இருப்பேன், ஆனால் - வேதனைப்படும் சினேகன்.!
சினேகனுக்கு பின்னால் இத்தனை விஷயங்களா? ரியல் எக்ஸ்பீரியன்ஸ்
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்?
யாருடா இந்த பீட்டா- கவிஞர் சினேகன் அடுத்த அதிரடி
என்னை ஒழிக்க நினைக்கிறார்கள்: சினேகன் ஆவேசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions