என் படத்தைப்பற்றி வதந்தி பரப்புகிறார்கள்!- பாடலாசிரியர் சினேகன்

Bookmark and Share

என் படத்தைப்பற்றி வதந்தி பரப்புகிறார்கள்!- பாடலாசிரியர் சினேகன்

யோகி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் பாடலாசிரியர் சினேகன். அதையடுத்து உயர்திரு 420 என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது ராஜராஜ சோழனின் போர்வாள் என்ற சரித்திர படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த படத்துக்காக நீண்ட தலைமுடி கெட்டப்பில் நடித்து வரும் அவர், வாள் சண்டை பயிற்சியெல்லாம் எடுத்திருக்கிறார். அதோடு, தஞ்சாவூரில் திறந்த வெளியில், அதாவது பொதுமக்கள் முன்னிலையில், இப்படத்துக்கான கம்போஸிங் செய்தார் இளையராஜா.

அப்படி வித்தியாசமான முறையில் பரபரப்பாக தொடங்கப்பட்ட அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 3 மாதங்களாக நடைபெறவில்லை. அதனால் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக ராஜராஜ சோழன் படம் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக சமீபத்தில் செய்தி பரவியது.

ஆனால், இதுபற்றி சினேகனைக்கேட்டால், படம் நிறுத்தப்பட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு விசயங்களையும் பாத்து பாத்து படமாக்கி வருவதால் காலஅவகாசம் ஏற்பட்டிருக்கிறது.

மேலும். இந்த படத்தில் நடிக்கும் சில முன்னணி நடிகர் நடிகைகளின் கால்சீட் எதிர்பார்த்தபடி கிடைக்காததால்தான் 3 மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் என் படம் திரைக்கு வந்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதனால் ராஜராஜ சோழனின் போர்வாள் படம் நிறுத்தப்பட்டிருப்பதாக பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்கிறார் சினேகன்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி
பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!
மேடையிலேயே இதை சொல்லி இருப்பேன், ஆனால் - வேதனைப்படும் சினேகன்.!
சினேகனுக்கு பின்னால் இத்தனை விஷயங்களா? ரியல் எக்ஸ்பீரியன்ஸ்
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்?
யாருடா இந்த பீட்டா- கவிஞர் சினேகன் அடுத்த அதிரடி
என்னை ஒழிக்க நினைக்கிறார்கள்: சினேகன் ஆவேசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions