சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்?

Bookmark and Share

சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சினேகன் அதிக வாக்குகளுடன் முன்னிலை வகுத்து வருகிறார்.

இது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி, சுஜா மற்றும் காஜல் ஆகியோருக்கு பிடிக்கவில்லை, இதனால் மூவரும் சினேகனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆம், இதுவரை ஸ்நேகனுக்கு எதிராக இருந்த டிவீட்களை ரி-ட்வீட் செய்து வந்த காயத்ரி முதல் முறையாக சினேகன் எனக்கு பல உதவிகளை செய்து வந்தார், அதனால் அவருக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டு கொண்டுள்ளார்.

ஆனால் இது அவருக்கு ஆதரவாக அல்ல காயத்ரியை பெரும்பாலும் யாருக்கும் பிடிக்காது என்பதால் அவர் ஒட்டு கேட்டால் நிச்சயம் போட மாட்டார்கள் என்பதற்காக இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 அதேபோல் சுஜாவிற்கு உண்மையாக அடிபட்டுள்ளது, இதற்கு சினேகன் தான் காரணம் என காஜல் ட்வீட் போட்டு சுஜாவிடம் மன்னிப்பு கேட்க இதை சுஜாவும் ரி-ட்வீட் செய்துள்ளார்.

இதன் மூலம் இவர்கள் மூவரும் சினேகனுக்கு எதிராக கிளம்பி இருப்பது தெரிய வருகிறது, இவர்களது பிளானில் சினேகன் சிக்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions