என்னை ஒழிக்க நினைக்கிறார்கள்: சினேகன் ஆவேசம்

Bookmark and Share

என்னை ஒழிக்க நினைக்கிறார்கள்: சினேகன் ஆவேசம்

"பேஸ்புக், இணைய தளங்களில் தவறாக சித்தரித்து என்னை ஒழிக்க நினைக்கிறார்கள். புதைக்க புதைக்க முளைப்பவன் இந்த சினேகன்" என்று சினேகன் ஆவேசமாக கூறினார்.

சாந்தன் பட பாடல் வெளியீட்டு விழாவில் சினேகன் பேசியதாவது:

என்னை கட்டிப்பிடி பாடலாசியர் என்று விமர்சிக்கிறார்கள். ஒரு அமைப்பின் கருத்துக்கள், சேவைகள் பிடித்து அந்த அமைப்பில் சேர்ந்தேன். அன்பை பரிமாறிக்கொள்ள ஆரத் தழுவிக்கொள்ளுதல் அந்த அமைப்பின் விதிமுறை.

அதை நான் ஏற்றுக் கொண்டேன். அந்த அமைப்பு வழங்கிய மனநல பயிற்சிகள் கட்டிப்பிடித்தல் என்னை மாற்றியது. ஆனால் அந்த அமைப்பு அதன் மூலம் ஒரு மதத்தை பரப்ப முயன்றபோது அதிலிருந்து நான் விலகிக் கொண்டேன்.

ஆனாலும் அந்த மனநல கல்வியையும், கட்டிப்பிடித்தலையும் நான் மற்றவர்களுக்கு போதித்து வருகிறேன். நிறைய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி கொடுத்து வருகிறேன். கட்டிபிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

கமலஹாசன் கட்டிப்பிடித்தால் சரி, சினேகன் கட்டிப்பிடித்தால் தவறா? இணைய தளங்களில் என்னை பற்றி படுகேவலமாக சித்தரிக்கிறார்கள். அதற்காக நான் கவலைப்படுவதில்லை. என் பாடலை விமர்சிங்கள், என் நூல்களை விமர்சிங்கள் என்னை ஏன் விமர்சிக்கிறீர்கள். சினேகனை யாராலும் அழிக்க முடியாது. என்றார் சினேகன். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions