ஒரே மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்; கலைகட்டப்போகும் இசை வெளியீட்டு விழா

Bookmark and Share

ஒரே மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்; கலைகட்டப்போகும் இசை வெளியீட்டு விழா

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் “சன் ஆஃப் சத்யமூர்த்தி”, இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக மார்ச் 14 ஆம் தேதி நடத்தவிருக்கிறார்களாம்.

சன் ஆஃப் சத்யமூர்த்தி இசை வெளியீட்டு விழாவில் டோலிவுட் சூப்பர் ஸ்டார்களான மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாண் இருவருமே கலந்து கொள்ளப்போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் இரண்டு ஸ்டார்களின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். எது எப்படியோ படத்தின் புரமோஷனுக்கு இப்படி ஒரு யுக்தி ரொம்ப அவசியம்தான். இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சன் ஆஃப் சத்யமூர்த்தி திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், சமந்தா, நித்யா மேனன், அத்ஹா ஷர்மா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் சினேகாவும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்களாம். 

 


Post your comment





Related News
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions