எனக்கு பிடிச்சதெல்லாம் அடி மிதி உதைதான்! - சொல்கிறார் சோனா

Bookmark and Share

எனக்கு பிடிச்சதெல்லாம் அடி மிதி உதைதான்! - சொல்கிறார் சோனா

பத்து பத்து என்ற படத்தில் ஆபாசமான வேடத்தில் நடித்து அறிமுகமானவர்தான் நடிகை சோனா. அதையடுத்து குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமாகி வேகமாக வளர்ந்த அவர், படம் தயாரிக்கும் அளவுக்கு சினிமாவில் முன்னேறினார்.

பின்னர், சில அரசியல்வாதிகளின் இருட்டு ரகசியங்களை படமாக்கப்போவதாக சொல்லி மிரட்டல் விடுத்தார். அதன்பிறகு, நள்ளிரவு பார்ட்டியில் எஸ்.பி.பி.சரண் தன்னை கற்பழிக்க முயற்சி செய்ததாக பெரிய பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டார் சோனா.

அதையடுத்து, சோனா டேஞ்சர் பார்ட்டி என்று அவருடன் நட்பு வைத்திருந்த இளவட்டங்கள் பெரும்பாலும் அவருடனான நட்பை முறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில், தற்போதும் சில படங்களில் நடித்துவரும் சோனா, எனக்கு கவர்ச்சியான வேடங்களை விட அடி மிதி உதை கொடுப்பது போன்ற அதிரடியான வேடங்களில் நடிப்பதுதான் ரொம்ப பிடிக்கும் என்கிறார்.

மேலும், மேடைகளுக்கு வரும்போது அரசியல் பற்றி நிறைய பேச நினைக்கிறேன். ஆனால் வாயை திறந்தால் கண்ட்ரோல் இல்லாமல் பேசி விடுவேன் என்பதால்தான் நான் வாயே திறப்பதில்லை.

அதோடு, நான் நடித்த சில படங்களை வாங்கி ரிலீஸ் பண்ணவும் நினைக்கிறேன். அப்படி நான் இறங்கி செய்கிறபோது அரசியல் குறுக்கீடுகளால் படத்துக்கு பிரச்சினை வந்து விடக்கூடும் என்பதால் அதிலிருந்தும் ஒதுங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லும் சோனா, இனிமேல் நான் நடிக்கிற படங்களில் கவர்ச்சியை கண்ட்ரோல் பண்ணிவிட்டு, நடிப்பை கட்டவிழ்த்து விடவும் திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார்.


Post your comment





Related News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
மிக மோசமான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் போட்டியாளர்
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
திருநங்கையா நீ? ஆடையை கழற்றி காட்ட சொன்ன இயக்குனர் - நடிகை பகீர் தகவல்.!
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் புதிய பட புகைப்படம் உள்ளே.!
பிரபல நடிகைக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய கல்லூரி மாணவன்- அவன் என்ன ஆனான் தெரியுமா?
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions