சோனா வாழ்க்கையை படம் எடுக்க மலையாள தயாரிப்பாளர்கள் போட்டி!

Bookmark and Share

சோனா வாழ்க்கையை படம் எடுக்க மலையாள தயாரிப்பாளர்கள் போட்டி!

பூவெல்லாம் உன் வாசம் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமனவர் சோனா. அதன்பிறகு ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பின்பு கவர்ச்சி நடிகையானார். அதன் பிறகு செயற்கை நகை விற்பனை கடை தொடங்கினார். வெங்கட்பிரபு, பிரேம்ஜி நண்பர்கள் குழுவில் இணைந்தார். வெங்கட்பிரபு உதவியாளர் இயக்கிய கனிமொழி என்ற படத்தை தயாரித்தார். அதில் பெரும் நஷ்டம் அடைந்தார். வெங்கட்பிரபு இயக்க ஒரு படம் தயாரிக்க அவருக்கு ஒன்றரை கோடி சம்பளம் கொடுத்தார். ஆனால் வெங்கட்பிரபு படம் இயக்கதாதால் அந்த பணத்தை திருப்பி கேட்டார். ஒரு வழியாக சமீபத்தில் அது செட்டில் செய்யப்பட்டது.

சோனா தற்போது மலையாளப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தனது வாழ்க்கை கதையை சுயசரிதையாக எழுதி வருகிறார். அதனை படமாக தயாரிக்கப்போவதாக அறிவித்தார். தற்போது சுயசரிதையை எழுதிவிட்டதாகவும் அதை தயாரிக்க பல மலையாளப் பட தயாரிப்பாளர்கள் போட்டியிடுவதாகவும். ஆனால் என் கதை மலையாளத்தில் தயாரிக்கப்படுவதை விரும்பவில்லை என்றும், நானே தமிழில் தயாரிப்பேன் என்றும் சோனா கூறியிருக்கிறார்.

"சினிமாவிற்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சிரஞ்சீவி, மம்முட்டி மோகன்லால் போன்ற ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். அந்த திருப்தியே போதும்" என்கிறார் சோனா.


Post your comment





Related News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
மிக மோசமான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் போட்டியாளர்
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
திருநங்கையா நீ? ஆடையை கழற்றி காட்ட சொன்ன இயக்குனர் - நடிகை பகீர் தகவல்.!
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் புதிய பட புகைப்படம் உள்ளே.!
பிரபல நடிகைக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய கல்லூரி மாணவன்- அவன் என்ன ஆனான் தெரியுமா?
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions