வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சோனா!

Bookmark and Share

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சோனா!

தமிழகத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலரும் உண்ண உணவு, தங்க இருப்பிடம் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வந்துள்ளனர். 

அதன்படி, முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்காக சமீபத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் ஆகியோர் நிதி உதவி செய்துள்ளனர். மேலும், ராகவா லாரன்ஸ், விஷால் ஆகியோர் தனிப்பட்ட முறையில் பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

இவர்களைத் தொடர்ந்து நடிகை சோனா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ‘ரைஸ் பவுல் சேலஞ்ச்’ என்ற புதிய அமைப்பை தொடங்கி, அதன்மூலம் கடந்த சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை பொதுமக்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதன்படி சிலர் பொருட்களாகவும், பணமாகவும் இந்த அமைப்புக்கு உதவி செய்துள்ளனர். இதுவரை சுமார் 1500 கிலோ அரிசி மற்றும் 500 டூத் பிரஷ்கள் பெறப்பட்டுள்ளதாம். இதுதவிர பிஸ்கெட்டுகள், குளியல் சோப்புகள், டூத் பேஸ்ட், காபி பவுடர் போன்றவற்றையும் தந்து உதவுமாறு சமூக வலைத்தளங்களில் சோனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இவ்வாறு பெறப்படும் அனைத்து பொருட்களையும் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலிடம் கொடுத்து, அவரது மன்றங்கள் மூலமாக தமிழகம் முழுக்க வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் நிவாரண பொருட்கள் சென்றடைய வழிவகை செய்துள்ளார் சோனா.


Post your comment





Related News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
மிக மோசமான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் போட்டியாளர்
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
திருநங்கையா நீ? ஆடையை கழற்றி காட்ட சொன்ன இயக்குனர் - நடிகை பகீர் தகவல்.!
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் புதிய பட புகைப்படம் உள்ளே.!
பிரபல நடிகைக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய கல்லூரி மாணவன்- அவன் என்ன ஆனான் தெரியுமா?
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions