சோனா நடித்த படத்துக்கு யு சர்டிபிகேட்! -டைரக்டர் ஏ.வெங்கடேஷ் பெருமை

Bookmark and Share

சோனா நடித்த படத்துக்கு யு சர்டிபிகேட்! -டைரக்டர் ஏ.வெங்கடேஷ் பெருமை

மகாபிரபு, பகவதி, குத்து, ஏய், சண்டமாருதம் உள்பட பல ஆக்சன் படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். அதோடு அங்காடித்தெரு படத்தில் கொடூரமான வில்லனாகவும் நடித்தார். ஆனால், தற்போது தனது ஆக்சன் ரூட்டில் இருந்து மாறி ரொம்ப நல்லவன்டா நீ என்ற படத்தை காமெடி கதையில் இயக்கியிருக்கிறார். அப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நாயகன் மிர்ச்சி செந்தில், நாயகி ஸ்ருதி பாலா, சோனா, ரோபோ சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அப்போது டைரக்டர் ஏ.வெங்கடேஷ் பேசுகையில், கில்லாடி, சண்டமாருதம் படங்களுக்கு பிறகு எனது இயக்கத்தில், ரொம்ப நல்லவன்டா நீ படம் மார்ச் 26ந்-தேதி ரிலீஸ் ஆகுது. இந்த படத்துக்கான கதையை ரொம்ப வித்தியாசமான யோசித்து பண்ணியிருக்கேன். முதல்ல கதையை கேட்ட தயாரிப்பாளர் விழுந்து விழுந்து சிரிச்சார். ஆக சிரிப்புக்கு அங்கே கியாரண்டி கிடைச்சிடுச்சு. அதுக்கு அப்புறம் பெரிய ஹீரோ, பெரிய காமெடியனை வச்சி பண்ணலாமுன்னு நெனச்சேன். ஆனா அவங்களை சந்திக்க முடியாத சூழல் இருந்தது.

அதனால்தான் மிர்ச்சி செந்தில ஹீரோவா நடிக்க வைக்க முடிவு செய்தேன். படத்துல இமான் அண்ணாச்சியும், ரோபோ சங்கரும் காமெடி செய்திருக்காங்க. எல்லா நடிகர் நடிகைங்களுமே கேட்ட நேரத்துல கால்சீட் தந்ததால 35 நாள்ல படத்தை முடிச்சிட்டேன். சண்டமாருதம் படத்துக்கு முன்னாடியே இந்த படம் முடிஞ்சிடுச்சு. ஆனா பிஸினசுக்கு லேட்டாயிடுச்சு.இந்த படத்தின் கதை 7 நாளில் நடக்கிற விசயம். அறிமுகம் இல்லாத ரெண்டு பேர் சந்திக்கிறாங்க. அப்புறம் ஏன்டா சந்திச்சோம்னு பீல் பண்றாங்க.

அதாவது உங்களோட பிரச்சினைய இன்னொருத்தன்கிட்ட சொல்லாதீங்க. அப்படி சொன்னா அது இன்னும் பெரிய பிரச்சினையாகிடும் என்பதுதான் இந்த படத்தோட கதை.மேலும், இந்த படத்துல கவர்ச்சி நடிகை சோனா ஒரு முக்கியான ரோல்ல நடிச்சிருக்காங்க. ஆனால் அவரை துளியும் கவர்ச்சி காட்ட வைக்கல. நடிக்க வச்சிருக்கேன்.

அதனால் சோனா படித்துல நடிச்சிருக்காருன்னா நிறைய சீனை கத்தரிக்க வேண்டியதிருக்கும் என்று நினைச்ச தணிக்கைக்குழு அதிகாரிங்களுக்கு படத்துல அவரை பார்த்துட்டு பெரிய ஆச்சர்யம். ஆக, சோனாவும் நடிச்சிருக்கிற என் படத்துக்கு யு சான்றிதழ் கிடைச்சிருக்கு என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் என்றார் ஏ.வெங்கடேஷ்.


Post your comment





Related News
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
நயன்தாரா மீது புகார் !
ஆகஸ்டில் துவங்கும் வெங்கடேஷின் அடுத்த படம்
அடுத்தமாதம் வெங்கடேஷின் புதுப்பட அறிவிப்பு!
தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் வெங்கடேஷ்...
பிக்கு ரீமேக்கில் அப்பா-மகளாக சமந்தா, வெங்கடேஷ்...?
குறும்படங்களுக்கு பாதை அமைக்கிறது ரஷ்ய கலாச்சார மையம்
இயக்குநரின் தெனாவெட்டு பதில்..!
ஜில்லா ரீமேக்கில் ரவிதேஜா - வெங்கடேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions