கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சோனாக்‌ஷி சின்ஹா

Bookmark and Share

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சோனாக்‌ஷி சின்ஹா

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஒரே நேரத்தில் பல பெண்கள் சேர்ந்து நெயில் பாலீஸ் போட்டுக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்டது.

இந்த சாதனை நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் அதிகளவு கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவராக சோனாக்‌ஷி சின்ஹா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரது பெயர்களும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து சோனாக்‌ஷி சின்ஹா கூறுகையில், ‘‘கின்னஸ் புத்தகத்தில் என் பெயர் இடம்பெற வேண்டும் என்று எனக்கு குழந்தை பருவத்தில் இருந்தே ஆசை. அந்த ஆசை தற்போது நிறைவேறியிருக்கிறது’’ என்றார்.


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions