செண்டை மேளம் அடித்து தந்தை பிறந்த நாளை கொண்டாடிய சோனாக்சி  சின்கா

Bookmark and Share

செண்டை மேளம் அடித்து தந்தை பிறந்த நாளை கொண்டாடிய சோனாக்சி  சின்கா

பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்கா. இவர் பாரதீய ஜனதா எம்.பி.யாக உள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் ஆவார். இவரது மகள் சோனாக்சி சின்கா. இவரும் பிரபல இந்தி நடிகை ஆவார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் சோனாக்சி சின்கா நடித்துள்ளார். சோனாக்சி சின்கா தனது தந்தை சத்ருகன் சின்காவின் 70–வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டார். இதற்காக அவர் தனது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் கேரள மாநிலம் ஆலப்புலா வந்தார். அங்குள்ள படகு இல்லத்தில் நேற்று சத்ருகன் சின்கா கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

பிறந்த நாளையொட்டி படகு இல்லம் அருகே கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கேரளாவின் புகழ்பெற்ற செண்டை மேளம், களரி சண்டை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை சத்ருகன் சின்காவும், மகள் சோனாக்சி சின்காவும் ரசித்து பார்த்தனர்.

செண்டை மேளத்தின் இசையில் மயங்கிய சோனாக்சி சின்கா தானும் செண்டை மேளம் அடிக்க ஆசைப்பட்டார். உடனே செண்டை மேள கலைஞர் அருகில் சென்று செண்டை மேளத்தை அடிக்கும் முறை பற்றி கேட்டார். பிறகு அவரும் செண்டை மேளம் அடித்து மகிழ்ந்தார். களரி சண்டை கலைஞர்களிடம் இருந்த வாளை வாங்கி சத்ருகன் சின்கா அவர்களுடன் பயிற்சி செய்து பார்த்தார். இதை கைதட்டி சோனாக்சி சின்கா ரசித்தார்.

கேரளாவில் பிறந்த நாள் கொண்டாடியது பற்றி சத்ருகன் சின்கா கூறியதாவது:–

நான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆலப்புழா வந்தேன். அப்போது இந்த பகுதியின் அழகு என்னை மயக்கியது. எனவே மீண்டும் இங்கு வர வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. இதன்படி எனது பிறந்த நாளை இங்குள்ள படகு இல்லத்தில் எனது குடும்பத்தினருடன் கொண்டாடினேன். காஷ்மீரை விட கேரளா இயற்கை அழகு மிக்கதாக உள்ளது. இங்குள்ள மூணாறின் அழகை ரசிக்க மீண்டும் கேரளா வருவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions