ஆள் மாஸாக இருந்தாலும்... மோசமான விருது பெறுவதில் ஹாட்ரிக் அடித்த சோனா!

Bookmark and Share

ஆள் மாஸாக இருந்தாலும்... மோசமான விருது பெறுவதில் ஹாட்ரிக் அடித்த சோனா!

நல்ல உயரம், நச்சென்று கலர்... ஆளை அசத்தும் அழகு.. எல்லாம் இருந்தும் என்ன புண்ணியம், மோசமான நடிகை விருது மட்டுமே சோனாக்ஷி சின்ஹாவுக்கு வருடா வருடம் கிடைத்து வருகிறது.

தொடர்ந்து 3வது வருடமாக அவருக்கு மோமசான நடிகை விருது கிடைத்துள்ளது.வழக்கம் போல இதையும் அமெரிக்காவைக் காப்பியடித்துத்தான் நம்மவர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.

கோல்டன் ராஸ்பெரி.. செல்லமாக தங்க கூமுட்டை என்று சொல்லிக் கொள்ளலாம்... என்பது இந்த விருதின் பெயர். டப்பா படங்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்த விருது தருவார்கள்.

அதேபோல பாலிவுட்டிலும் இப்படிப்பட்ட ஒரு விருதைக் கொடுத்து வருகிறார்கள். அதற்குப் பெயர் கோல்டன் கேளா விருது. இந்த ஆண்டின் மோசமான படமாக ஹம்ஷகல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த மோசமான நடிகராக அர்ஜூன் கபூரைத் தேர்வு செய்துள்ளனர்.மோசமான நடிகை விருது சோனாக்ஷிக்குக் கிடைத்துள்ளது. என்ன சோகம் என்றால் கடந்த 3 வருடமாக இவருக்குத்தான் இந்த விருது தவறாமல் கிடைத்து வருகிறது.

லிங்கா, ஹாலிடே, ஆக்ஷன் ஜாக்சன் ஆகிய படங்களுக்காக இந்த விருதாம்.ஜாக்கி ஷ்ராபின் மகன் டைகர் ஷ்ராபுக்கு மோசமான அறிமுகம் என்ற விருது, ஹீரோபன்டி படத்துக்காகக் கிடைத்துள்ளது.

மோசமான இயக்குநர் விருது ஆக்ஷன் ஜாக்சன் படத்துக்காக பிரபுதேவாவுக்குக் கிடைத்தது. ஒய் ஆர் யூ ஸ்டில் டிரையிங்.. அதாவது நீ ஆணியே புடுங்க வேணாம்.. விருது சோனம் கபூருக்குக் கிடைத்துள்ளது.


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions