‘லேடி ரஜினி’ சோனாக்‌ஷியை குஷிப்படுத்திய முருகதாஸ்

Bookmark and Share

‘லேடி ரஜினி’ சோனாக்‌ஷியை குஷிப்படுத்திய முருகதாஸ்

‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா. இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘அகிரா’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

தமிழில் வெளியான ‘மவுனகுரு’ படத்தைத்தான் இந்தியில் இப்பெயரில் ரீமேக் செய்கிறார் முருகதாஸ். தமிழில் அருள்நிதி நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் ஹீரோயின் பாத்திரமாக மாற்றி அதில் சோனாக்‌ஷியை நடிக்க வைத்தார்.

படப்பிடிப்பு இடைவேளையில் இணைய தளத்தில் புதிய ஆப்ஸாக வந்திருக்கும் டப்ஸ்மாஷ் சிஸ்டத்தில் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ரஜினியின் ஹிட் பஞ்ச் வசனத்தை பேசி முருகதாஸ் அதை வெளியிட்டார்.

இப்போது அவருக்கு பதிலடியாக, ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்’ என்ற வசனத்தை ரஜினியைப்போலவே சோனாக்‌ஷி நடித்து பதிவு செய்துள்ளார். 

இதைப்பார்த்த முருகதாஸ் தனது இணைய தள பக்கத்தில் சோனாக்‌ஷியை பாராட்டி மெசேஜ் போட்டார். சோனாக்‌ஷி சின்ஹா மும்பையின் லேடி ரஜினி என குறிப்பிட்டுள்ளார்.

அதைப்பார்த்து சந்தோஷம் அடைந்த சோனாக்‌ஷி முருகதாஸுக்கு நன்றி தெரிவித்தார். அகிரா படத்தில் முக்கிய வேடமொன்றில் லட்சுமிராய் நடிக்கிறார். இதேபடத்தில் இந்தி பட இயக்குனர் அனுராக் கஷ்யப், சத்ருகன் சின்ஹாவும் நடிக்கின்றனர்.


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions