சோனம் கபூரை புகழ்ந்து தள்ளிய சச்சின், யுவராஜ்...!

Bookmark and Share

சோனம் கபூரை புகழ்ந்து தள்ளிய சச்சின், யுவராஜ்...!

நடிகை சோனம் கபூரின் நீரஜா படத்தைப் பார்த்த சச்சின் தெண்டுல்கர், யுவராஜ் சிங் இருவரும் அவரை மாற்றி மாற்றி புகழந்து தள்ளியிருக்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை சோனம் கபூர், ஷபானா ஆஸ்மி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் நீரஜா.

கடத்தப்பட்ட விமானத்தை அதே விமானத்தில் பணி புரியும் பணிப்பெண் மீட்பது தான் இப்படத்தின் கதை. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தில் விமானப் பணிப்பெண்ணாக அணில் கபூரின் மகள் சோனம் கபூர் நடித்திருந்தார்.

ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக்கொண்டு உருவான இப்படம் பல்வேறு தரப்புகளிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், யுவராஜ் சிங் இப்படத்தில் நடித்த சோனம் கபூரின் நடிப்பைப் புகழந்து தள்ளியுள்ளனர்.

சச்சின் தெண்டுல்கர் "ஒரு ஹீரோவை மறந்து இந்தபடத்தை உருவாக்கியது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் நடித்திருந்த அனைவரும் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். நீரஜா கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம்" என்று கூறியிருக்கிறார்.

இதேபோல யுவராஜ் சிங் ஒரு துணிச்சலான வீரர் பற்றிய படத்தை திரையிட்டுக் காண்பித்ததற்கு நன்றி. மொத்தத்தில் நீரஜா தனது வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணிப்பவர்" என்று பாராட்டி இருக்கிறார். இருவரின் பாராட்டால் தற்போது சோனம் கபூர் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
கண்ட இடத்தில் தொட்ட கயவன்: பயந்து நடுங்கி அழுத நடிகை- பிளாஷ்பேக்
பெண்கள் பற்றிய ராம் கோபால் வர்மா சர்ச்சை! பதிலடி கொடுத்த சோனம் கபூர்
உச்சக்கட்ட கவர்ச்சி உடையணிந்து வந்த சோனம் கபூர்- புகைப்படம் உள்ளே
அடடா, இதுவல்லவோ அதிசயம்: தனுஷ் தோழியை பார்த்து வியக்கும் பாலிவுட்
அடுத்தவர் காலை வாரி விட்டு முன்னேற விரும்பவில்லை: சோனம் கபூர்
குழந்தைப் பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: இளம் ஹீரோயின் பகீர் தகவல்
சோனமா? காஜலா? குழப்பத்தில் தனுஷ்!
மீண்டும் தனுஷுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை!
மது விருந்துகளில் பங்கேற்க மாட்டேன்: சோனம்கபூர்
தயாரிப்பில் இறங்கிய சோனம் கபூர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions