பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகை சோனம் கபூர் மும்பை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்

Bookmark and Share

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகை சோனம் கபூர் மும்பை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்

இந்திப்பட முன்னணி நடிகை சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபூரின் மகள். 29 வயதான நடிகை சோனம் கபூர், நடிகர் தனுசுடன் ‘ராஞ்சனா’ என்ற இந்திப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த படம் தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது நடிகை சோனம் கபூர், நடிகர் சல்மான்கானுடன் ‘பிரேம் ரத்தன் தான் பயோ’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரை அடுத்த கொண்டல் பகுதியில் நடந்து வருகிறது. படத்தில் நடித்து கொண்டு இருந்தபோது திடீரென சோனம் கபூருக்கு காய்ச்சல், தொடர் இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

எனவே அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், சோனம் கபூர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையறிந்த அவரது தாயார் சுனிதா கபூர் உடனடியாக மும்பையில் இருந்து ராஜ்கோட் விரைந்தார். பின்னர் மகளை மும்பை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சையளிக்க முடிவு செய்தார்.

அதன்படி நடிகை சோனம் கபூர் நேற்று ராஜ்கோட்டில் இருந்து ஆம்புலன்சு விமானம் மூலம் மும்பை அழைத்து வரப்பட்டார். இதைத்தொடர்ந்து நடிகை சோனம் கபூர் மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சோனம் கபூரை தனி வார்டில் வைத்து கண்காணித்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஒருவர் தெரிவித்தார். நடிகை ஒருவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது இந்தி திரைப்பட வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions