பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகை சோனம் கபூரின் உடல்நிலையில் முன்னேற்றம்

Bookmark and Share

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகை சோனம் கபூரின் உடல்நிலையில் முன்னேற்றம்

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர், நடிகர் சல்மான்கானுடன் ‘பிரேம் ரத்தன் தான் பயோ’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரை அடுத்த கொண்டல் பகுதியில் நடந்தது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகை சோனம் கபூர் திடீரென பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். இதையறிந்த அவரது தாயார் சுனிதா கபூர் ராஜ்கோட் விரைந்து, சோனம் கபூரை தனி விமானம் மூலம் மும்பை அழைத்து வந்தார். பின்னர், சோனம் கபூர் மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சோனம் கபூரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து படப்பிடிப்பு தளத்துக்கு திரும்புவார் என்றும் அவரது செய்தித்தொடர்பாளர் ஒருவர் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

மேலும், சோனம் கபூர் மீது ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினர் கொண்டுள்ள அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். 


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions