படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை.: மருத்துவமனையில் அனுமதி

Bookmark and Share

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை.: மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பாலிவுட் நடிகை சோனம் கபூர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலிவுட் நடிகை சோனம் கபூர் பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை. மருத்துவமனையில் அனுமதி சோனம் அண்மையில் துபாய்க்கு சென்றிருந்தார். அங்கிருந்து மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் தனக்கு மிகவும் களைப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

விடாது வேலை செய்ததால் சோனம் கபூருக்கு அலுப்பு மற்றும் காய்ச்சல் இருந்தது. இருப்பினும் அவர் ஓய்வு எடுக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சோனம் ட்விட்டரில் தெரிவித்து தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதை வெறுக்கிறேன்... ஊவி என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions