சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை

Bookmark and Share

சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை

ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் ‘உன்னால் என்னால்’. இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள்.

மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். அதிரடி வில்லி கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார்.

முகமது ரிஸ்வான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான். தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.

மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால், ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார். அந்த வலையில் ஜெகா, உமேஷ், ஜெயகிருஷ்ணா ஆகிய மூவரும் வந்து சிக்குகிறார்கள். 

இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் கதை. இதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம்.

அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம். இப்படம் வித்தியாசமாக இருக்கும்’ என்றார்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions