சோனியா அகர்வால், செம்மீன் ஷீலா மோதும் பாலக்காட்டு மாதவன்

Bookmark and Share

சோனியா அகர்வால், செம்மீன் ஷீலா மோதும் பாலக்காட்டு மாதவன்

பழம்பெரும் மலையாள நடிகை செம்மீன் ஷீலா மலையாளத்தில் 200 படங்கள் வரை நடித்திருக்கிறார். தமிழில் அவ்வப்போது சில படங்களில் நடிப்பார். சந்திரமுகி, சீடன் படங்களில் கடைசியாக நடித்திருந்தார்.

தற்போது பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார். கே.பாக்யராஜ் அந்த 7 நாட்கள் படத்தில் நடித்திருந்த கேரக்டரின் பெயரில் இந்தப் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் ஷீலா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

முழுநீள காமெடி படமான இதில், ஷீலா காமெடியாக நடிக்கிறார். ஷீலாவுக்கும், சோனியா அவர்வாலுக்கும் இடையில் நடக்கிற கலாட்டாக்கள்தான் படத்தின் கதை. இருவருக்கும் இடையில் பாலக்காட்டு மாதவன் தவிப்பதும் தனி காமெடி. கே.பாக்யராஜ் மூத்த பாலக்காட்டு மாதவனாக நடித்திருக்கிறார்.

அவர் பெரிய இசை அமைப்பாளராகிவிட்டமாதிரி கதை அமைத்திருக்கிறார்களாம். பெரும்பகுதி படப்பிடிப்பு பாலக்காட்டிலேயே நடந்து முடிந்திருக்கிறது. படத்தை தமிழ், மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

சந்திரமோகன் இயக்கி உள்ளார். பஷீர் தயாரித்துள்ளார். அஜ்மல் அஜீஸ் இசை அமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்கிறார்கள்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions