சோனியா அகர்வாலின் மிரட்டல்!

Bookmark and Share

சோனியா அகர்வாலின் மிரட்டல்!

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். சண்டிகாரில் இருந்து இறக்குமதியான இவர், அதன்பிறகு கோவில், 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை என பல படங்களில் நடித்தார். பின்னர், தன்னை தமிழில் அறிமுகம் செய்த டைரக்டர் செல்வராகவனையே 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால், 2010ல் அவரை விவாகரத்து செய்தார்.

ஆனால் அதையடுத்தும் அவர் சென்னையை காலி செய்யாமல் இங்கிருந்தபடியே வானம் படத்தில் நடிக்கத் தொடங்கியவர், ஒரு நடிகையின் வாக்குமூலம், பாலக்காட்டு மாதவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தற்போது அச்சமென்ன என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவரை புக் பண்ண செல்லும் சில டைரக்டர்கள் முன்பை விட சோனியாஅகர்வால் அதிக முதிர்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்கள்.

அதுமட்டுமின்றி, தான் மாஜி ஹீரோயினி என்பதை முன்வைத்து அதிகமான சம்பளம் கேட்பதாகவும் கூறுகிறார்கள். அதனால் கேரக்டர் வேடங்களில் நடிக்க அவரை தேடிச்செல்லும் பட்ஜெட் பட நிறுவனங்கள் போன வேகத்திலேயே திரும்பிக்கொண்டிருக்கின்றன.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions