பில்டப் கொடுக்கும் சோனியா அகர்வால்!

Bookmark and Share

பில்டப் கொடுக்கும் சோனியா அகர்வால்!

ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திற்கு பிறகு சோனியா அகர்வால் நாயகியாக நடித்துள்ள படம் பாலக்காட்டு மாதவன். இந்த படத்திற்கு பிறகு நாயகியாக தொடர்ந்து நடித்து விட வேண்டும் என்று சில டைரக்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால், யாரும் அவருக்கு பிடிகொடுக்கவில்லை. அதனால், தற்போது அச்சமென்ன, பொய் சொல்லாதேடி மற்றும் டெம்பர் தெலுங்கு படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்துள்ளார்.

அதேசமயம், மே 22-ந் தேதி பாலக்காட்டு மாதவன் திரைக்கு வருவதால், இந்த படம் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால் தனது மார்க்கெட் உயர்ந்து விடும் என்றும் கணக்குப் போடுகிறார் சோனியா அகர்வால்.

விளைவு, யாராவது தன்னை படங்களுக்கு புக் பண்ண வந்தால், பாலக்காட்டு மாதவன் படம் வந்தால் நான் பேசப்படுவேன். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினாக நடித்திருக்கிறேன்.

அதனால் கதையோடு கலந்த வெயிட்டான வேடங்களில் மட்டுமே இனிமேல் நடிப்பேன் என்று பெரிய பில்டப்பை கொடுத்தே பேசத் தொடங்குகிறாராம்.

மேலும், புதிதாக அவருக்கு படங்கள் புக்காக வில்லை என்றபோதும், பல மொழிகளிலும் தனக்கு தற்போது புதிய படங்கள் விறுவிறுப்பாக புக்காகிக்கொண்டிருப்பதாக விரல்விட்டு எண்ணி, கதை சொல்லப்போகிறவர்களை தலைசுற்ற வைக்கிறாராம் சோனியா அகர்வால்.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions