பந்தா பண்ணாத சோனியா அகர்வால்!

Bookmark and Share

பந்தா பண்ணாத சோனியா அகர்வால்!

சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்து வந்த காலத்தில் அவரை வைத்து படம் இயக்கியவர்கள் அவரைப்பற்றி நிறைய புகார் செய்தனர். அதாவது ஒருநாள்கூட அவர் குறித்த நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்ததில்லை.

நினைத்தால் வருகிறார், நினைத்தால் போய் விடுகிறார். இவரையெல்லாம் வைத்து எப்படி வேலை வாங்குவது என்று கூறி வந்தனர். ஆனால், அப்படியிருந்த சோனியா அகர்வால் இப்போது காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.

அதாவது, தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளங்களுக்கு சரியான நேரத்திற்குள் வந்து விடும் அவர், ஈவினிங் வீட்டிற்கு செல்லும்போதுகூட டைரக்டர்களாக சொல்லும்போதுதான் மேக்கப்பை கலைத்து விட்டு விடைபெறுகிறாராம்.

மேலும், நான் மாஜி ஹீரோயின். அதனால் எனக்கு தடபுடல் கவனிப்புகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லையாம். உட்கார சொன்ன இடத்தில் உட்காருகிறாராம். கொடுத்ததை சாப்பிடுகிறாராம்.

அந்த வகையில், தயாரிப்பு நிறுவனத்தின் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் நடிகையாகி விட்டாராம் சோனியா அகர்வால். இதை நேரில் பார்க்கும் அவரது மாஜி டைரக்டர்கள், சோனியா அகர்வாலா இப்படி மாறிவிட்டார் என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்துகிறார்கள். 


Post your comment





Related News
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions