சோனியா அகர்வால் மீண்டும் போலீசாக நடிக்கும் எவனவன்!

Bookmark and Share

சோனியா அகர்வால் மீண்டும் போலீசாக நடிக்கும் எவனவன்!

அடுத்தடுத்து காக்கிச் சட்டை வேடங்களாக வருகிறது சோனியா அகர்வாலுக்கு. அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த சாயா படம் சமீபத்தில்தான் வெளியானது. அடுத்து அவர் மீண்டும் போலீஸ் வேடம் போட்டுள்ளார் எவனவன் படத்துக்காக.

டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் வின்சென்ட் அசோகன், புதுமுகம் அகில் சந்தோஷ், முருகாற்றுப் படை சரண், சாக்ஷி சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இசை - பெடோ பீட். கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் ஜெ.நட்டிகுமார். இவர் தந்தை ஜானகிராமன் மோகமுள் உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர்.

மெய்ப் பொருள், பனித்துளி படங்களை இயக்கியவர் நட்டிகுமார். எவனவன் படம் குறித்து அவர் கூறுகையில், "எதையும் திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள். .

இதை செய்தால் இப்படி செய்தால் பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்தே செய்பவர்கள் பலர். பின் விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் பலர் அப்படித்தான் சின்ன தவறுதானே செய்கிறோம். 

அதனால் என்ன பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறு அவனை என்ன மாதிரியான சிக்கலில் ஆழ்த்துகிறது. என்பதுதான் கதைக் களம். இதில் வின்சென்ட் அசோகனும், சோனியா அகர்வாலும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்றம் ஒன்றை விறு விறுப்பாகக் கண்டு பிடிக்கும் அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். 

மெய்ப்பொருள், பனித்துளி படங்களின் படிப்பிடிப்பு பெரும்பகுதி அமெரிக்காவில் படமாக்கினோம். ஆனால் எவனவன் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஆந்திராவில் நடந்தது. பாடல் காட்சிகள் மலேசியாவில் படமானது," என்றார்.


Post your comment





Related News
கதாநாயகனே இல்லாத ஹாரர் த்ரில்லரில் சோனியா அகர்வால்..!
தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக உள்ளது: காஜல் அகர்வால்
பட்டியலில் இவர்கள் மட்டும் தானா? விருது யாருக்கு
சிரஞ்சீவி என் மனதில் இடம் பிடித்து விட்டார்: காஜல் அகர்வால்
அது நான் தான், நானே தான்: பெருமையாக கூறும் காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் மீது கடுப்பில் இருக்கிறார்களா மற்ற நடிகைகள்?
என்னாது, அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்தாரா?
அஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால்
அஜித்துக்காக இவ்ளோ தூரம் இறங்கி வந்தாரா காஜல் அகர்வால்?
“டபுள் மீனிங் பேசியது …நானா? “அதிர்ச்சியில் காஜல்…திட்டி தீர்த்த ஹீரோக்கள்…







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions