சின்னத்திரையில் மீண்டும் சோனியா அகர்வால்

Bookmark and Share

சின்னத்திரையில் மீண்டும் சோனியா அகர்வால்

நடிகை சோனியாக அகர்வால் இயக்குனர் செல்வராகவனிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றதும் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஒரு நடிகையின் கதை படத்தில் நடித்தவர் தற்போது பாலக்காட்டு மாதவன் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் புதுயுகம் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்தார். பின்பு அதிலிருந்து விலகினார். இப்போது மீண்டும் அதே சேனலுக்கு திரும்பியிருக்கிறார். தற்போது அவர் மல்லி என்ற தொடரில் நடிக்கிறார்.

இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது அம்மாவுக்கும், மகளுக்குமான கதை. சோனியா அகர்வால் 8 வயது குழந்தையின் அம்மாவாக நடிக்கிறார். மகளாக பேபி ஹரினி நடிக்கிறார்.

பணக்கார வீட்டு பெண்ணான சோனியா அகர்வாலின் ஒரே செல்ல மகள் ஹரினி. அவளுக்கு தெரு பையன் பாலாவுடன் நட்பு. இறந்த தன் தங்கை மல்லி போல இருப்பதாக சொல்கிறான் பாலா.

இதனால் அவனது தங்கை பாசத்துக்காக அவனுடன் அன்பான நட்பு கொள்கிறாள். பணக்காரியான சோனியாவுக்கு மகள் தெரு பையனுடன் நட்பாக இருப்பது பிடிக்கவில்லை. மகளை திருத்த நினைக்கிறார்.

மகள் அம்மாவை திருத்த நினைக்கிறார். கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மாஸ்டர் ஜார்ஜ், சேது டார்வின், தேனி முருகன், சுசித்ரா ஆனந்த், கிருஷ்ணகுமாரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions