கதாநாயகனே இல்லாத ஹாரர் த்ரில்லரில் சோனியா அகர்வால்..!

Bookmark and Share

கதாநாயகனே இல்லாத ஹாரர் த்ரில்லரில் சோனியா அகர்வால்..!

ஒன்றல்ல, இரண்டல்ல.. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி  என ஐந்துமொழிகளில் ‘அகல்யா’ என்கிற ஹாரர் மூவி தயாராக உள்ளது. இந்தப்படத்தை தயாரித்து இயக்குகிறார் இயக்குனர் ஷிஜின்லால்.. மலையாளத்தில் நிறைய விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.. ‘அகல்யா’ படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார். 

இந்த ஹாரர் த்ரில்லரில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.. படத்தில் கதாநாயகன் இல்லை என்பது ஒரு ஹைலைட்டான விஷயம்.. இதுதவிர இன்னொரு தென்னிந்திய சினிமா பிரபலம் இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார். அது யாரென்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர் ஷிஜின்லால்.. 

கதை, திரைக்கதை, வசனத்தை சிபின் ஷா என்பவர் எழுதியுள்ளார். வழக்கமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நாம் பார்க்கும் ஹாரர் படங்களை போல இல்லாமல், ஹாலிவுட் பாணியில் மிரட்டலான ஹாரர் படமாக இது உருவாக இருக்கிறது. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தனது நல்லாசியுடன் இந்தப்படத்தை துவக்கி வைத்துள்ளார். 

இந்தப்படத்தின் பூஜை இன்று ஏவி எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் படத்தின் நாயகி சோனியா அகர்வால்,நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ஹாலிவுட்டில் இருந்து வி.எப்.எக்ஸ் மற்றும் படத்தொகுப்பு கலைஞர்கள் டீம் இந்தப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் சுரேஷ் பத்மநாபன். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஆனந்தகுட்டனின் சீடர் ஆவார். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகும் இந்தப்படம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions